மக்கள் எம்மை நிராகரித்தால் ஆட்சியைக் கைவிடுவதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை - ரில்வின்
சூழ்ச்சிகள் மூலம் ஆட்சியைத் தக்கவைக்கும் எண்ணம் இல்லை. மக்கள் எம்மை நிராகரித்தால் ஆட்சியைக் கைவிடுவதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று JVP செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நாங்கள் சுயநலமாக எதையாவது அடைந்து கொள்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை. நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவே வந்துள்ளோம். இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாகும். எனவே, மக்கள் எங்களை நிராகரிப்பார்களாயின் நாங்கள் ஆட்சியில் தொடர வேண்டிய அவசியம் இல்லை.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள், சுயலாபம் தேடியவர்கள் மற்றும் மோசடிகளை மூடிமறைக்க முற்பட்டவர்களே மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க முயற்சிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment