Header Ads



சவூதி செல்லவுள்ள இலங்கைக் குழு - அநுரகுமாரவின் மன்னிப்புக் கடிதம் மன்னரிடம் கையளிக்கப்படும்



சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது. 


வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார். 


நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலியின் தலைமையில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ள குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உள்வாங்கப்படவுள்ளது. அந்த விசேட தூதுக்குழு சவூதி அரேபிய மன்னரைச் சந்திக்கவுள்ளது. 


இதன்போது சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியிலான பொது மன்னிப்பை வழங்குமாறு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அனுப்பி வைக்கப்படும் கடிதத்தையும் அந்தக் குழு சவூதி அரேபிய மன்னரிடம் கையளிக்கவுள்ளது. 

No comments

Powered by Blogger.