சவூதி சட்டம் பிரதியமைச்சருடன் இலங்கைத் தூதுவர் பேச்சு
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், ரியாத்தில் உள்ள சவூதி அரேபிய நீதி அமைச்சில் வைத்து, அந்நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மிஷால் பின் அலி அல்-பலாவியைச் சந்தித்தார்.
இரு தரப்பினரும் நீதித்துறை விவகாரங்கள் மற்றும் சட்ட ஒத்துழைப்புத் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடியதுடன், இத்துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இச்சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது; குறிப்பாக, தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை இடமாற்றம் செய்தல் மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களை இறுதி செய்வதை விரைவுபடுத்துவது குறித்து இதில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.
இச்சந்திப்பின்போது, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர்/சான்சரி (Chancery) பிரிவுத் தலைவர் திருமதி தமித்ரி சமங்கிக மற்றும் சஜீத் ஆகியோர் தூதுவருடன் சென்றிருந்தனர்.

Post a Comment