Header Ads



அனோஜனை விடுதலை செய்யக்கோரி இன்றும் போராட்டம்


சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த அனோஜனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும், இது தொடர்பில் சவூதி அரேபிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், பொதுமக்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து இன்று (20) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.


கல்முனை நற்பிட்டிமுனை பகுதியில் இன்று நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பில் மீளாய்வு செய்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை சவூதி அரேபிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும், இலங்கை அரசாங்கமும் இவ்விடயத்தில் உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.


அனோஜனின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் உரிய முறையில் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரதான கோரிக்கையாக இருந்தது. See less

No comments

Powered by Blogger.