இனவாதம். மதவாத அரசியலுக்கு எதிரான அநுரகுமாரவின் தொடர் கருத்துக்கள் - ஐ.நா. வரவேற்பு
இனவாதம் மற்றும் மதவாத அரசியலுக்கு எதிரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தொடர்ச்சியான கருத்துக்கள், 2025 ஆம் ஆண்டு நவம்பர் சூறாவளி மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் ஐநா வரவேற்றுள்ளது.
இருப்பினும், பரந்த அளவிலான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உரையாற்றிய மனித உரிமைகளுக்கான ஐநா பிரதி உயர்ஸ்தானிகர் அவா டாபோ இப்படி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment