Header Ads



அரசாங்கத்தால் மட்டும் தனியாக நாட்டை கட்டியெழுப்ப முடியாது


அரசாங்கத்தால் மட்டும் தனியாக நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும், அதற்கு மக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.


களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


"வாக்களித்து அரசாங்கத்தை அமைத்ததோடு மக்களின் கடமை முடிந்துவிடவில்லை. இது மக்களின் அரசாங்கமாகும். எனவே, அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. கடந்த காலங்களில் அரசியல் பேரணிகள் நடத்தும் போது காணப்பட்ட தேவையற்ற அதிகாரப் போட்டிகளோ, பாதுகாப்பு பதற்றங்களோ இன்றி புதிய அரசியல் கலாசாரத்துக்கு அரசாங்கம் முன்மாதிரியாகத் திகழ்கிறது.


நாட்டில் நிலவும் சிறிய அளவிலான பிரச்சினைகளைத் தீர்த்து, பொருளாதார ரீதியாகவும் அரசியல் கலாசார ரீதியாகவும் நாட்டை வலுப்படுத்தும் திட்டமிட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 'Clean Sri Lanka' திட்டத்தை அரசாங்கத்தினால் மட்டும் தனித்து நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும் என கேட்டுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.