சவூதி அரசாங்கத்தையும், அந்நாட்டின் மரபுகளையும் எதிர்க்கும் வகையில் செயற்பட்டால்..?
சவூதி அரசாங்கத்தையும், அந்நாட்டின் மரபுகளையும் எதிர்க்கும் வகையில் செயற்பட்டால் அனோஜன் பிரச்சினை மேலும் தீவிரமடையும். ஆகவே தற்போதைய இக்கட்டான தருணத்தில் மிகவும் அவதானத்துடனும், பொறுமையுடனும் செயற்பட வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அனைவரிடமும் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விடயத்தில் சவூதி இராத்தியத்துக்கும், அவர்களின் மரபுகளுக்கும் எதிராக செயற்பட கூடாது. நாடுகள் அனைத்துக்கும் அவர்களுக்கே உரித்தான மரபுகள் மற்றும் கலாசாரங்கள் காணப்படும் அவற்றை மதித்து செயற்பட வேண்டும். தற்போதைய இக்கட்டான நிலையில் இங்கிருந்துக் கொண்டு எதிரான எதிர்ப்புக்களை தெரிவிப்பது நெருக்கடிகளை ஏற்படுத்தும். இது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம் என்பதால் மிகவும் அவதானத்துடனும், பொறுமையாகவும் செயற்பட வேண்டும்.
அனோஜன் விவகாரத்தை கொண்டு அரசியல் செய்வதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Post a Comment