Header Ads



அதிவேக ரயிலுடன் தனியார் பஸ் மோதல்


அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த 'ரஜரட்ட ரெஜினி' அதிவேக ரயிலுடன் தனியார் பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (7) நிகழ்ந்துள்ளது.


விபத்தின் போது பஸ்ஸானது புகையிரத வீதி கடவையைத் தாண்டி முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், அதன் பின்பகுதி ரயிலுடன் மோதியுள்ளது. இதனால் பஸ்ஸின் பின்பகுதிக்குக் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 


விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸிற்குள் அதன் சாரதி மாத்திரமே இருந்துள்ளார் என்றும், அவர் எவ்வித காயங்களுமின்றி  உயிர் தப்பியுள்ளார் என்றும் ரத்கம பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.