Header Ads



ஷானக்கவின் அதிரடி விளாசல் - இலங்கை வீரரின் சாதனையாகவும் பெயரிடப்பட்டார்


இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிராக செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி, கரீபியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே அதிவேக சதத்தை அடித்து, தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 


துடுப்பாட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக தசுன் ஷானக 43 பந்துகளில் 121 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.  அவர் வெறும் 39 பந்துகளில் இந்தப் போட்டியில் சதம் விளாசினார். 


இந்த இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 12 சிக்ஸர்களும் அடங்குகின்றன. அவர் 281.39 ஸ்டிரைக் ரேட்டுடன் ஆட்டத்தை முடித்தார்.  தசுன் ஷானகவின் இந்த சதமானது, இருபதுக்கு 20 போட்டியொன்றில் இலங்கை வீரர் ஒருவர் குறைந்த பந்தில் பெற்றுக் கொண்ட அதிவேக சதமாக பதிவாகியுள்ளது. See less

No comments

Powered by Blogger.