ஞானசாரரின் நிலை, என்னவாகப் போகிறது...?
ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் காரணமாக, தேரர் அத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியைச் சிறையில் கழிக்க நேரிடும் என பேராசிரியர் பிரதீபா மகாநாம ஹேவா தெரிவித்தார்.
தேரர் சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த வேளையில், 2019 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டதாக மகாநாம ஹேவா தெரிவித்தார்.
இதன்படி, ஞானசார தேரர் ஒன்பது மாதங்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவித்ததாகக் குறிப்பிட்ட பேராசிரியர், அந்தப் பொதுமன்னிப்பு தவறானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதன் காரணமாக, தண்டனையின் மீதமுள்ள காலப்பகுதியான ஐந்து வருடங்களும் மூன்று மாதங்களும் சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.

Post a Comment