Header Ads



பசில் ராஜபக்சவை பிடிப்பதற்கு, சர்வதேச பிடியாணை


மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய அவருக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.  இதனை பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 


சந்தேகநபர் ஒருவர் இருக்கும் நாடு அல்லது முகவரி தொடர்பில் தகவல்கள் அறியப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், அவரைப் பற்றிய மேலதிக தகவல்களைப் திரட்டுவதற்காகவே இந்த நீல நிற அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும், எவ்வித அரசியல் தராதரமும் பாராது குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.