Header Ads



ஞானசாரரை காணவில்லை


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் தறைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கின்றன.


இந்நிலையில், உயர்நீதிமன்றின் இத்தீர்ப்பு வெளியானதனைத் தொடர்ந்து அவர் விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், இதுவரை காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரோ அவரைக் கைது செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments

Powered by Blogger.