நாமல் ஜனாதிபதி வேட்பாளர் - பிரதமர், அமைச்சரவை குறித்து தேர்தல் நெருங்கும் போது அறிவிப்போம்
2029 இல் நாமல் ராஜபக்ச எமது ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். , பிரதமர், அமைச்சரவை குறித்து தேர்தல் நெருங்கும் போது நாங்கள் அறிவிப்போம் என்று பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் (28.09.2026) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
SJB க்கும், எமக்கும் எவ்வித பிரச்சினைகளோ அல்லது போட்டியோ கிடையாது. எங்களுடைய போராட்டம், அநுரகுமார மற்றும் jvp க்கு எதிராகத்தான்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கான தேவை எமக்கு இல்லை. அதற்குரிய முயற்சியையும் நாம் மேற்கொள்ளவில்லை. எமது நோக்கம் இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியை உருவாக்குவதுதான். அதற்குரிய போராட்டத்தில் தான் நாங்கள் இருக்கின்றோம். எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்குத் தேவையில்லை.

Post a Comment