தலைமறைவாகிய ஞானசார, எங்குள்ளார் என வினவிய நீதிபதி
இவ்வழக்கானது கொழும்பு மேல் நீதிமன்றம் -09ல் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஞானசார தேரர் சமூகமளிக்காமல் அவர் சார்பாக இன்னொரு பிக்கு சட்டதரணிகளினூடாக ஆஜராகியதோடு, ஞானசார தேரரினது உடல்நிலை குறைபாடு சம்மந்தமாக மருத்துவ சான்றிதல் ஒன்றினையும் முன்வைத்தனர்.மேலும் நேற்றைய தினம் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் மூலம் ஞானசார தேரருக்கு ஒக்டோபர் 1ம் திகதி முன்னிலையாகுமாரு அறிவித்தலொன்று (Notice) மட்டும் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து நீதிமன்றத்திற்கு ஞானசார தேரர் முன்னிலையாகுவார் எனவும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணம் செய்தனர்.
இதன் போது சிரேஷ்ட சட்டதரணி சிராஸ் நூர்தீன் அனுசரணையின் கீழ் ஆஜராகிய சட்டதரணிகள் நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூலம் ஞானசாரதேரருக்கு எதிராக பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை ஒக்டோபர் 1ம் திகதி கைது செய்து முன்னிலைப்படுத்துமாரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே தலைமறைவாகியுள்ளதாகவும் மன்றிற்கு சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இதன் போது நீதிபதி. ஞானசார தேரர் தற்போது எங்கு உள்ளார் என வினவிய போது அவர் சார்பாக ஆஜராகிய சட்டதரணிகள் குழாம் மற்றும் பிக்குவிற்கும் தெரியாது என பதிலளித்தனர்.
இருபக்க சமர்ப்பணங்களையும் பதிவு செய்த கௌரவ நீதிபதி அவர்கள் ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்திற்கு முற்படுத்துமாரு பிடியாணை (Warrant) ஒன்றை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது..

Post a Comment