துரத்தித் துரத்தி படுகொலை செய்யப்பட்ட பெண் யார்..?
ஹல்பேதொட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் துரத்தித்துரத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் கும்பலின் பழிவாங்கும் செயற்பாடே உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தேகம - ஹல்பேதொட்ட பிரதேசத்தில் நேற்று (27) முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதாள உலகக் கூலிப்படையினால் ரி-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரந்தெனிய சுத்தா எனப்படும் பாதாள உலகத் தலைவனின் உத்தரவுக்கமையவே இந்தத் கொலை மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Post a Comment