சரிவடையும் சனத்தொகை - குழந்தைகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கடந்த ஆண்டில் இலங்கை 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளபோதிலும், நாட்டின் மக்கள் தொகை 0.7 சதவீதத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட ‘இலங்கையின் சமூக பொருளாதாரத் தரவு அறிக்கை’ சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் நாட்டின் மக்கள் தொகை 21.75 மில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024-இல் 5.53 மில்லியனாக இருந்த சிறுவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 4.5 மில்லியனாகக் குறைந்துள்ளது. இதன் அடிப்படையில், 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை சுமார் 1.34 மில்லியனால் அதிகரித்து, 0-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை சுமார் 1.03 மில்லியனால் சரிவடைந்துள்ளது.

Post a Comment