இலங்கையில் உலகப் பாம்புகளின் மாநாடு
“பாம்புகள், அறிவியல், சிற்றினங்களின் உயிர்வாழ்தல் மற்றும் இலங்கை” (Snakes, Science, Species Survival & Sri Lanka) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த அனைத்துலக மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், சூழலியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கையில் உள்ள பாம்புகளின் பரம்பல், பாதுகாப்பு மற்றும் அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகள் தொடர்பான முக்கிய விடயங்கள் இம்மாநாட்டில் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. அத்துடன், பாம்பு இனங்கள் மற்றும் அவைகளின் உயிர்வாழ்தல் தொடர்பான சவால்களைக் கலந்துரையாடவும், அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் நிபுணர்களுக்கு இது ஒரு சிறந்த தளமாக அமையும்.
இலங்கையின் பல்லினப் பாம்பு விலங்கினங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும், அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளின் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment