Header Ads



நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் வீழ்ச்சி


அரசாங்கம் பொய்யுரைப்பதை இன்னமும் நிறுத்தவில்லை என எஸ்.எம். மரிக்கார் Mp தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிக் காலத்தில் 40 வீதமான காலம் பூர்த்தியாகியுள்ளது அவர் வழங்கிய வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.


அதிவேக நெடுஞ்சாலைகள், மின்சார ரயில் கட்டமைப்பு, மீன் பிடித் தொழிலுக்கு அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய செயலி, கனிய வள அகழ்வு ஆய்வு போன்ற எந்தவொரு திட்டமும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை .


பெரிய பேச்சுக்கள் பேசினாலும் நடைமுறையில் அமுல்படுத்தப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சமூகத்தின் அனைத்து துறைகளும் அழிவுப்பாதையில் செல்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் அரசாங்கம் ஒரு விடயத்தை மட்டும் குறைவில்லாமல் செய்வதாகவும் அது பொய்யுரைப்பது எனவும் மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.


மக்களை ஏமாற்றும் அரசியலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் செய்து வருவதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.