முகத்தில் ஒட் டிக்கொண்ட வௌவால் - இலங்கை வந்தவருக்கு அதிர்ச்சி
இலங்கைக்குச் சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பயணி ஒருவருக்கு எதிர்பாராத விதமாக வௌவால் ஒன்று வந்து உடலில் ஒட்டிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.
சாலையோரம் நின்றுகொண்டிருந்த அவரின் மீது திடீரென வௌவால் வந்து விழுந்துள்ளது. அதன்பிறகு அந்த வௌவால் அவரை விட்டு விலகாமல் உடலில் ஒட்டிக்கொண்டதால், என்ன செய்வது என்று தெரியாமல் அந்தப் பயணி சில நொடிகள் அப்படியே நின்றுள்ளார். அருகில் இருந்த மற்றொருவரும் அவருக்கு உதவ முயன்ற காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
வௌவால் திடீரென வந்து விழுந்தபோதும், அந்தப் பயணி பதற்றத்தில் ஓடாமல் அமைதியாக நின்றுள்ளார். அவரது முகத்தில் அதிர்ச்சியும் குழப்பமும் தெரிந்த நிலையில், வௌவால் தொடர்ந்து அவருடன் இருந்துள்ளது. இதனைக் பார்த்த அருகிலிருந்தவர்கள் என்ன செய்வது என யோசித்தபடி நின்றுள்ளனர். எதிர்பாராத இந்தச் சந்திப்பு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Post a Comment