Header Ads



'பாலியல் இலஞ்சம்' கேட்ட பொதுஜன பெரமுன


உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியிலிருந்து போட்டியிடத் தயாரான நிலையில்  வேட்புமனு வழங்குவதற்காகத் தன்னிடம் 'பாலியல் இலஞ்சம்' கேட்டதாக ''லக்மவட்ட ஹடக்' அமைப்பின் தலைவியும் நடிகையுமான மதுஷா ராமசிங்க தெரிவித்துள்ளார். 


எந்த ஊடகத்திலும் நான் இதைச் சொல்வேன். மஹிந்த ராஜபக்சவுடன் மிக நெருக்கமாகச் செயல்படும் அவரது தனிப்பட்ட செயலாளர்களில் ஒருவர் இவர். அதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.


வேட்பு மனுத் தாக்கலின் போது நடந்த சம்பவம்

பெயர்களைக் கூறுவது எனக்குப் பிரச்சினையில்லை. நான் பெயர்களைக் கூறுவேன். ஆனால் சிக்கல் என்னவென்றால் நான் பொலிஸுக்குச் சென்றபோது 'வீடியோக்கள் இருக்கிறதா?' என்று கேட்கிறார்கள்.


நாம் ஒரு கட்சி அலுவலகத்திற்கோ அல்லது நாட்டின் தலைவரைச் சந்திக்கவோ செல்லும்போது காணொளி எடுத்தா செல்கிறோம்? 'ஆடை களையாவிட்டால் வேட்புமனு இல்லை' என்று கூறினார்கள். வேட்புமனுத் தாக்கலுக்கு 2 நாட்களுக்கு முன்னர் இவ்வாறு கூறினார்கள். அவர் தனது வாயால் மூன்று முறை கூறினார். அண்ணே நான் எத்தனை வருடங்களாகப்  பொதுஜன பெரமுனவில் பணியாற்றியுள்ளேன் என்று பார்க்கிறீர்களா?' எனக் கேட்டேன்.


நீங்கள் நீண்டகாலமாக அரசியலில் இருக்கிறீர்கள் தானே என்றார். நான் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைப்பாளர் பதவியை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு முதன்முதலில் வெளியே வந்த நபர்.


கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடம் சொல்வதானால் இவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். மஹிந்தவை நான் மதிக்கிறேன். அவருக்கு இந்தச் சம்பவம் முழுமையாகத் தெரியாது. ஆனால் அந்த நேரத்தில் அவராலும் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் 'இவரைச் சேர்த்துக் கொண்டால் நாங்கள் விலகுவோம்' என்று அங்கிருக்கும் குழுக்கள் அச்சுறுத்துகின்றன. இதனாலே நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.