சாரா ஜாஸ்மின் உள்ளிட்ட சிலர் படகுகளில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் - சட்டமா அதிபர் திணைக்களம்
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சில தரப்பினரின் திட்டமிட்ட உதவியும் விரிவான சதித்திட்டப் பின்னணியும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருதில் சஹ்ரானின் உறவினர்கள் 16 பேர் உயிரிழந்தமை, முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டமை, சாரா ஜாஸ்மின் உள்ளிட்ட சிலர் படகுகள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டமை ஆகியவற்றின் பின்னணியிலும் ஆழமான சதித்திட்டம் இருந்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Post a Comment