மார்ட்டின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை பரிசளித்த றியாஸ்
9 வருடங்கள் முன்பு சிறியளவில் ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டிடத்தில் ரியாஸ் தனது 35வது வயதில் துவங்கிய ரெடிமேட் வியாபாரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து தற்போது தொடுபுழா நகரத்தின் மையப்பகுதியில் சுமார் 60000 சதுர அடியில் ஐந்து மாடி கட்டிடத்தில் மிகப்பிரபலமான Maharani Wedding Collection ஆக நானூறுக்கும் அதிகமானவர்கள் பணியாற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
கடந்த 2 நாட்களாக அனைத்து மலையாள இணைய சேனல்களிலும் இவ்வாண்டு ஓணம் வியாபாரத்தின், லாப விகிதத்தை சுமார் ஒரு கோடி ரூபாய் தனது ஊழியர்களுக்கு பகிர்ந்து வழங்கிய அவரின் செயல்பாடு பகிரப்பட்டு வருகிறது.
வி.ஏ.ரியாஸ் ஒன்பது வருடங்கள் முன்பு சிறியளவில் கடை ஆரம்பித்த போது அவரிடம் முதல் ஊழியராக பணியில் சேர்ந்தவர் மார்ட்டின். ரியாஸின் கடந்த 9 வருடங்கள் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் உடன் பயணித்த மார்ட்டினுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ரியாஸுக்கு உண்டு.
முதல் முதலாக தனது கடையில் பில்லிங் பிரிவு ஊழியராக வந்த மார்ட்டின், தற்போது வளர்ந்த நிறுவனத்தின் Accounts Manager ஆக உயர்ந்துள்ளார்.
இரண்டு தினங்கள் முன்பு தனது கடை ஊழியர்களை கவுரவிக்கும் நிகழ்வில், யாரும் எதிர்பாராத வகையில், மார்ட்டின் வீடு கட்டுவதற்கு தொடுபுழா நகரில் நிலம் வழங்குவதாக அறிவித்து தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ரியாஸ்.
மார்ட்டின் தாய், மனைவி, மகன் உட்பட மேடையில் அழைத்து சொத்து பத்திரம் மாதிரியை வழங்கிய வி.ஏ.ரியாஸ், அந்த நிலத்தில் மார்ட்டினுக்கு தானே வீடும் கட்டி தருவதாகவும் கூறி. இரட்டிப்பு மகிழ்ச்சியை பரிசளித்து மார்ட்டின் குடும்பத்தினர் கண்களில் வழிந்த ஆனந்த கண்ணீரை பார்த்து ரியாஸ் கண்களும் உள்ளமும் பூரித்தது.
Colachel Azheem


Post a Comment