Header Ads



அம்பாந்தோட்டை முன்னாள் மேயருக்கு என்ன நடந்தது..?


அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அவரது சடலம் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


சடலம் இவ்வாறு மீட்டக்கப்பட்ட நிலையில், உயிரை மாய்த்துக்கொள்ள முயச்சி செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.  தற்போது அவருக்கு 57 வயது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அம்பாந்தோட்டை மாநகரசபைக்கு மேயராக 2018 ஆம் ஆண்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன், தெரிவாகியிருந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.