Header Ads



9 மாதங்களில் 2 ட்ரில்லியன் வருமானம்


இலங்கை சுங்கத் திணைக்களம் 2026 ஆம் ஆண்டிற்கான தனது வருமான சேகரிப்பில் 2 ட்ரில்லியன் அதாவது 2 லட்சம் கோடி ரூபாய் என்ற வரலாற்று மைல்கல்லை 2026 செப்டம்பர் 15 அன்று கடந்துள்ளது.


இதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட 2.207 ட்ரில்லியன் ரூபாய் வருமான இலக்கில், செப்டம்பர் 15 வரையிலான காலத்தில் 2 ட்ரில்லியன் ரூபாயை ஈட்டி 90 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கை சுங்கத் திணைக்களம் எட்டியுள்ளது.


ஆண்டின் முதல் 9  மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னரே இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளதால், முழு ஆண்டு இலக்கை அடைவதற்கு இன்னும் சுமார் 207 பில்லியன் ரூபாய்கள் மட்டுமே தேவைப்படுகிறது.


சுங்கத் திணைக்களம் தனது வரலாற்றிலேயே மிக அதிகபட்ச ஆண்டறிக்கை வருமானமாக 2025-ஆம் ஆண்டில் 2.56 ட்ரில்லியன் ரூபாயை ஈட்டியிருந்ததாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.