Header Ads



500 கோடி ரூபா கடத்தலை காட்டிக்கொடுத்த நபரை கொலை செய்ய முயற்சி


500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட 3 நபர்கள் செல்லக்கதிர்காமம் பகுதியில்   கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதற்காக அங்கொடை பிரியங்கர மற்றும் ரூபன் ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் 1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கொலை ஒப்பந்தத்தின் பிரதான நபரான மதுக்க சாமர என்ற மதுவாவிடம் இருந்து 2 கத்திகள், 8 கிராம் ஹெரோயின் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜீப் வாகனத்தின் போலியான இலக்கத் தகட்டுடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


சந்தேக நபர் கைது செய்யப்படும்போது தனது மகனுக்கு எழுதிய உயிரை மாய்ப்புக்கான கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்தி தமது உயிரைப் பணயம் வைத்து இந்தக் கொலையை செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.