Header Ads



மாதாந்தம் 50,000 ரூபா ஓய்வூதியம் - யாசகம் பெறும் முதியவர் - குழம்பிப் போன அதிகாரிகள்

 


மாதம்தோறும் 50,000 ரூபா ஓய்வூதியம் பெறும் நபர் ஒருவர், ராகம பாலத்தின் கீழ் யாசகம் செய்து வரும் அதிர்ச்சித் தகவலை முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.


ராகம பாலத்தின் கீழ் மூன்று யாசகர்கள் தங்கியிருப்பதாக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிகிந்தும் அவர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அது குறித்து ஆராய அதிகாரிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.


குறித்த அதிகாரிகள் அந்த மூன்று யாசகர்களையும் மீட்டு கம்பஹா, மாளிகாதென்ன முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.


சுமார் இரண்டு வாரங்களின் பின்னர், யாசகம் செய்து வந்த நபர்களில் ஒருவரது சகோதரி, அவரை மீண்டும் அழைத்துச் செல்வதற்காக அந்த முதியோர் இல்லத்திற்கு வந்துள்ளார்.


இது தொடர்பாக அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதே,  யாசகம் எடுத்த குறித்த நபர் மாதம்தோறும் 50,000 ரூபா ஓய்வூதியம் பெறுபவர் என்பதும், அவரது ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே அந்தப் பெண் அவரை அழைத்துச் செல்ல வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 


குறித்த நபர் எதனால் இவ்வாறு யாசகம் செய்து வாழ்ந்து வருகின்றார் என்பது பற்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.