300 மில்லியன் பெறுமதியான போதைப் பொருள் பிடிபட்டது
300 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருளுடன் தம்பதியினர் உட்பட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை, பொக்குந்தரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 11 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் காவல்துறைப் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment