மருத்துவப் பட்டதாரி 16 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டதாரியான ஹஷினி ரங்கிகா ஆராச்சி, பட்டமளிப்பு விழாவில், MBBS பாடநெறிக்காக வழங்கப்பட்ட 32 தங்கப் பதக்கங்களில் 16-ஐ வென்று சிறப்பானதொரு கல்விச் சாதனையைப் படைத்துள்ளார்.
இறுதி MBBS தேர்வு உட்பட MBBS-இன் அனைத்து ஐந்து பிரிவுகளிலும் அவர் 'முதலாம் வகுப்பு சிறப்புத் தேர்ச்சி' (First Class Honours) பெற்றதோடு, மருத்துவப் பயிற்சிப் பணிக்கான (internship) MBBS பட்டதாரிகளின் பொதுத் தகுதிப் பட்டியலில் இலங்கையிலேயே முதலிடத்தையும் பிடித்தார்.
மேலும், கல்விசார் சிறப்பிற்கான 'பேராசிரியர் திலக் ஹெட்டியாராச்சி விருது' (Professor Tilak Hettiarachchy Award) அவருக்கு வழங்கப்பட்டது.

Post a Comment