Header Ads



முஸ்லிம் Mp க்கள், சுகாதார அமைச்சரை சந்தித்தனர்


 ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் Mp க்கள், சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தலையீடு செய்யுமாறு கோரி, சுகாதார அமைச்சரை இன்று (18) சந்தித்தனர்.


பாதிக்கப்பட்ட சுகாதார உதவியாளர்களை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதை இப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்க முடியாது என தூதுக்குழுவினர் சுட்டிக்காட்டினர். இதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்து, இவ்வாறான இடமாற்றம் நிரந்தரமான தீர்வல்ல என்பதையும் ஏற்றுக்கொண்டார். 


மேலும், மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும், நியாயமான மதத் தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் பொருத்தமான சீருடை ஏற்பாடுகளை அனுமதிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுகாதார  அமைச்சர்,  முஸ்லிம் Mp க்கள் குழுவினருடன் ஏற்றுக்கொண்டார்.


கலந்துரையாடலில் பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்:


MLAM. ஹிஸ்புல்லாஹ்

முஜிபுர் ரஹ்மான்

இம்ரான் மஹரூப்

M. நிஸாம் காரியப்பர்

MS. உத்துமாலெப்பை

MS. அப்துல் வாசித்

அஷ்ரப் தாஹிர்

NTM. தாஹிர்

No comments

Powered by Blogger.