Header Ads



ஈஸ்டர் தாக்குதலை சிங்களவர்கள் செய்ததாக காட்டுவதற்கு முயற்சி - சாமர சம்பத் Mp


முஸ்லிம்கள் சிலரால் ஈஸ்டர்  தாக்குதல் நடத்தப்பட்டமை அனைவருக்கும் தெரியும். எனினும், தற்போது சிங்களவர்கள் அதனை செய்ததாக காட்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. பூஜித் ஜயசுந்தரவும், ஹேமசிறி பெர்னாண்டோவும்தான் ஈஸ்டர்  தாக்குதலில் 300 பேரைக் கொன்றனர். குண்டுகளை  இயக்கச் செய்ததும் அவர்கள்தான் என்பதுபோல காட்ட இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.


 மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய  இருவருக்கும் எதிராக ஜனாதிபதி அநுர குமார ஒரே ஒரு கையெழுத்தினை இட்டால் அவர்களைத்  தூக்கிலிட முடியும். அப்படிச் செய்தால் இந்த அரசாங்கம் மக்களிடத்தில் இன்னும் பிரபலமடையும்.


கடந்த காலங்களில் சிங்கள மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. தற்போது ஜேவிபியினரும் தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால், ஜேவிபியுடன் தொடர்பில் இருந்து, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இப்ராஹிமுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் தற்போது பிரச்சினை இல்லை. அவர்கள் வெளியில் சுதந்திரமாக உள்ளனர். ஆனால், தண்டனை அனுபவித்து சிறைக்குள் இருப்பது பூஜித்தும், ஹேமசிறியும் ஆகும்.


நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (6) இடம்பெற்ற அமர்வின்போதே  சாமர சம்பத் தசநாயக்க Mp  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.