Header Ads



CTB பஸ்ஸில் பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி


CTB பஸ்ஸில் பெண் பயணி ஒருவர் தொலைத்த ரூ. 10  இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை  மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். 


பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை செல்லும் 767 வழித்தட (4241 இலக்க) இ.போ.ச பஸ்ஸின் மதிய சேவையின்போது பயணித்த  பெண் வட்டுக்கோட்டையில் மரணச் சடங்கொன்றுக்குச் சென்றுவிட்டு, இன்னொரு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னரே அவரது கழுத்தில் இருந்த இரண்டரைப் பவுண் தங்கச்சங்கிலி இல்லாததை உணர்ந்தார்.


 வழிநெடுகிலும் சென்றுபார்த்தபோதும் சங்கிலியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. ’இனிச் சங்கிலி கிடைக்காது’என்ற கவலையோடு , மீண்டும் வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்தித்துறை நோக்கிச் செல்ல அதே  அதே பஸ்ஸில் ஏறியுள்ளார். 


அப்போது அவர் தனது தங்கச்சங்கிலி காணாமல் போன விடயத்தை பஸ்ஸின் நடத்துநருக்கும்,சாரதிக்கும் தெரியப்படுத்தியபோது அவர்கள் ‘நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில் அந்தச் சங்கிலி இருந்தது. அதைக் கண்டெடுத்து பத்திரமாக வைத்திருக்கிறோம்’என்று கூறி அதனை ஒப்படைத்துள்ளனர். 

 (கஜிந்தன்) See less

No comments

Powered by Blogger.