CID யில் தில்ஷான் செய்துள்ள முறைப்பாடு
இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி மற்றும் அவதூறு பதிவுகளுக்கு எதிராக நடவடிக்க எடுக்குமாறு முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
நாட்டிற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிய சேவையின் மூலம் கட்டியெழுப்பிய நற்பெயருக்கு, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பொய்ப் பிரசாரங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தில்ஷான் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளி ஓருவருடன் தில்ஷான், தொடர்பு பேணியதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல்கள் பொய்யானவை எனவும் இதனால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் தில்ஷான் குற்றம் சுமத்தியுள்ளார்

Post a Comment