பெரியமுல்லை பள்ளிவாசலில் கண்ட, கண்குளிர்ச்சியான சம்பவம்
எல்லோரும் அரக்கப்பரக்க மாற்று மத சகோதரர்களை கவனிப்பதிலும் அவர்களுக்கு பள்ளிவாயிலை சுற்றிக்காட்டுவதிலும் அதனூடாக இஸ்லாத்தின் அடிப்படைகள் மற்றும் பெறுமானங்களை விளக்குவதிலும் பிஸியாக இருந்தோம்.வந்தவர்கள் எல்லோருக்கும் சிற்றுண்டி குர்ஆனின் சிங்கள/ஆங்கில மொழிபெயர்ப்பு உட்பட இஸ்லாமிய அடிப்படைகளை சொல்லும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.பொதுவாக எல்லோரும் அவற்றை பிரித்து வாசித்துக்கொண்டிருக்காமல் வந்த வழியே எமக்கு நன்றி சொல்லி விடைபெறுவர்.
ஆனால் இந்த புகைப்படத்தில் இருக்கும் கைகளின் சொந்தக்காரர்களான இருபது இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க மாற்று மத இளைஞர்கள் இருவர்-நண்பர்கள் என்று நினைக்கிறேன்- எல்லாம் முடிந்ததும் திரும்பிச் செல்லாது வரவேற்பு நிகழ்வுக்கதிரைகளில் உக்கார்ந்த வண்ணம் நீண்ட நேரம் தமக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட சிங்கள மொழி அல்குர்ஆன் பிரதிகளை வாசித்துக்கொண்டிருந்தனர். அவ்வளவு ஆரவாரமான சமயத்திலும் அந்த ஆன்மாக்கள் இரண்டும் அமைதியாக கண்களில் கியூரியோஸிடி மின்ன திருக்குர்ஆனின் பக்கம் மட்டுமே கவனத்தை குவித்திருந்தனர்.
அரபு எழுத்தணி, கட்டிடக்கலை,வட்டிலாப்பம் முதலான விடயங்களில் பொதுவாக எல்லோரும் ஆர்வம் காட்ட இந்த இரண்டு ஜீவன்களும் குர்ஆனில் மூழ்கிப்போயிருந்த காட்சி உண்மையில் அந்நாளின் ஒரு கண்குளிச்சியே!
Mujahidha Raziq

Post a Comment