Header Ads



மஹர சிறைச்சாலை கலவரத்தின் பின்னணியில் சதி உள்ளதா..?


மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் திட்டமிடப்பட்ட சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.


சிறைச்சாலையில் நிலவும் அதிகளவிலான இடநெருக்கடியும் ஒரு காரணியாக இருக்கலாம் என்ற போதிலும் சதித் திட்டம் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.


முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த மோதல் கைதிகளுக்கும் சிறை நிர்வாகத்திற்கும் இடையே மட்டுமே ஏற்பட்டுள்ளது எனவும் வன்முறையைத் தூண்டுவதற்கு வெளியில் உள்ள ஏதேனும் சக்திகள் பின்னணியில் இயங்கியுள்ளனவா என்பது குறித்தும் அரசாங்கம் விசாரித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.