Header Ads



டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை


இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி பன்னல, எலபடகம பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (7) முற்றுகையிட்டது. 


இதன்போது சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான டின் மீன் கையிருப்பு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.  இந்த இடத்தில் தயாரிக்கப்படும் டின் மீன்கள் சிறப்பு அங்காடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தயாரிப்பு திகதியைக் குறிப்பிடாமை, அந்த டின் மீன்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. 

No comments

Powered by Blogger.