Header Ads



அக்கரைப்பற்று பிரதேசசபை உதவித் தவிசாளராக சுபைதா உம்மா


- நூருல் ஹுதா உமர் -


அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா உத்தியோகபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.


அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் முன்னிலையில் எம்.எச். சுபைதா உம்மா தனது பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டார்.


இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். அஸ்ஹர், முன்னாள் தவிசாளர் எம்.ஏ. ராஷிக், அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் ஹையு, தேசிய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் வசீர் எம் ஜுனைட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.