இலங்கை நாட்டின் அழகை வெளிப்படுத்த விரும்புகிறேன்
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்துப் பேசியுள்ளார்.
தனது தாயார் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறுவதற்கு முன்பு அவர் அங்கேயே வளர்ந்தவர். "என் அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவர் அங்கு பிறந்து வளர்ந்தவர்; பின்னர் அவர்கள் வெளிநாட்டில் குடியேறினர்," என்று அவர் கூறினார்.
இலங்கைக்குச் செல்லும்போது, தனது தாத்தாவின் சொத்துக்களில் ஒன்று தனது குடும்பத்தின் கடந்த காலத்துடனான ஒரு முக்கியத் தொடர்பை நினைவூட்டும் இடமாகத் திகழ்வதாக ஜேசன் தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தி, அந்நாட்டின் அழகை வெளிப்படுத்த விரும்புவதாகவும் ஜேசன் தெரிவித்தார்.

Post a Comment