தலை, கால்கள், மறைப்பதால் என்ன சிக்கல்..?
சீருடை நிறம் வெள்ளை. முகம் மறைக்கபட்டால்தான் அடையாளம் தெரியாது. மற்றபடி, தலை, கால்கள், மறைப்பதால் என்ன சிக்கல்?
இது தொடர்பாக ஒரு அரச ஊழியர் சுற்றறிக்கை ஒன்று இருப்பதாகவும் ஞாபகம். ஒருவேளை, அதில் தாதியர் பணி சேர்க்கபட்டு இருக்காவிட்டால் இப்போது, திருத்தி சேர்க்கலாமே.
டிசம்பர் மாத காலத்தில் சபரி மலைக்கு மாலை அணியும், பக்த ஊழியர்கள், கறுப்பு நிற ஆடை அணிய வேண்டாம் என்பார்களோ..?
இந்த விதிகள் எல்லாம் என்ன, கல்லில் எழுத பட்டவை அல்லவே..? மாற்றம் ஒன்றே மாறாதது..!
மனோ கணேசன் Mp

Post a Comment