நமது நாட்டில் ஏமாற்று அரசியலே நடைமுறையில் காணப்படுகிறது - எதிர்க்கட்சித் தலைவர்
நமது நாட்டில் ஏமாற்று அரசியலே நடைமுறையில் காணப்படுகின்றன. துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் அதே விலைக்கு எரிபொருட்களை பெற்றுத் தருவோம் என்று தேர்தல் காலத்தில் கூறிய போதிலும் இன்று அவை எதுவும் பெற்றுக் கொடுத்தபாடில்லை. உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் நமது நாட்டில் மாத்திரமே தொடர்ந்து எரிபொருள் மீது வரி விதிக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசாங்கம் எப்போதும் ஏமாற்றும் வேலையையே செய்து வருகின்றது. மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆல் குறைப்போம் என கூறிவிட்டு மின்சாரக் கட்டணத்தை அதிகரித்துள்ளனர். புதுப்பிக்கத்தக்கு ஆற்றலுக்கு முன்னுரிமை தருவோம் என கூறிவிட்டு, இன்று எரிபொருள் மின் உற்பத்தி நிலைய மாபியாவின் அடிமையாக அரசாங்கம் மாறியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அன்று விவசாயிகளுடன் இணைந்து நெற்கதிர்களை கடித்துக் கொண்டு, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைக் பெற்றுத் தருவோம் என்றனர். ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகிறது. இவ்வாறு கூறிக் கொண்டு, உத்தரவத விலையாக 120 ரூபாயை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபா நட்டம், இதற்கெல்லாம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே காரணமாகும். ஒரு சமூகமாக அறிவால் வலுப்பட்ட சமூகமாக நாம் மாற வேண்டும். புதிய விடயங்களை ஒதுக்காமல் அனைத்து துறைகளையும் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment