Header Ads



இலங்கையில் சுற்றுலாவை முடித்துவிட்டுச் சென்ற சையத் சிராஜுதீன் விமான நிலையத்தில் உயிரிழப்பு


இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.


இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான நபரே இவ்வாறு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.


சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சையத் சிராஜுதீன் என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றுவிட்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.


விமானத்தில் இருந்து இறங்கியவர் குடிவரவு மற்றும் சுங்கத்துறை சோதனைகளை முடித்துவிட்டு, பிராட்வே செல்வதற்காக விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்திற்கு சென்றார்.


அங்குள்ள டிக்கெட் கவுண்டர் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகளும், மெட்ரோ நிலைய ஊழியர்களும் உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.