அவுஸ்திரேலிய தேசிய அணியில் யாழ்ப்பாணத்து வீரர்
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகியுள்ளார்.
இவர், (12) புதன்கிழமை தாய்லாந்தில் ஆரம்பமாகியுள்ள 4நாள் சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய தேசிய அணியின் சார்பில் பங்கேற்றுள்ளார்.
சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த ரத்னம் ரோஸி ஹரிந்த், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்து, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
அதன் பின்னர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிரிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

Post a Comment