ஒப்பந்தங்களை தயாரித்தவர்கள் பிடிபட்டனர்
இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முதலாவது மாடியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 7 கடவுச்சீட்டுகள், இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வந்து, போலி ஒப்பந்தங்களை தயாரித்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment