Header Ads



சிலர் 'ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள்' என்கின்றனர்


மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் தனது பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன். சிலர் 'ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள்' என்கின்றனர்., ''நான் நாடாளுமன்றுக்கு வருகை தந்த காலத்தில் இருந்து இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளதாக  நாமல் ராஜபக்ச Mp தெரிவித்துள்ளார்.


எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை. நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை. எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன. 


நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன். மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து அவருக்குக் கிடைத்தவை. அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல் 5 இடங்களுக்குள் இருக்கிறார்கள். இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும்.


ஏனென்றால் அப்பா அதை எனக்குக் கொடுத்து விட்டார் கடந்த வாரமே எழுதப்பட்டது. அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம் அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன்.


ஏனென்றால் ஆயுட்கால உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும் ஒருவன் நான்" என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.