ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது
ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதோடு, மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதாக அமைவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி கோட்பாடுகளின்படி, மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதாக அமைவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. திருச்சபையின் இந்தப் போதனையின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
கத்தோலிக்க திருச்சபை பழிவாங்கலை விரும்புவதில்லை. "நபர்கள் எப்போதும் கசப்பான உணர்வுகளையும் தனிப்பட்ட பழிவாங்கல்களையும் கடந்து, மனப்பூர்வமாக மன்னிக்க அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறான தீவிரவாதத் தாக்குதல்கள் வழிபாட்டுத் தலங்களிலோ, நாட்டின் வேறு எந்த பகுதியிலோ மீண்டும் இடம்பெறாத வகையில் தடுப்பதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment