நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு
நேபாள வெள்ளப்பெருக்கு காரணமாக, பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவை உள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653
மின்னஞ்சல்: slemb.kathmandu@mfa.gov.lk See less

Post a Comment