ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களைத் தவிர்க்குமாறு கோரிக்கை
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சிறுபொழுது வசதிக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், அழியாமல் பல நூறு ஆண்டுகள் சூழலில் நிலைத்திருந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment