Header Ads



நெடுந்தீவு படகு அனர்த்தம் - அனைவரும் பாதுகாப்பாக மீட்பு


குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு சென்ற படகில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார். 


குறித்த படகில் 2 படகோட்டிகள் உட்பட 10 ​பேர் பயணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 


படகு அனர்த்தத்திற்குள்ளாகியிருந்த போது அதிலிருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் ​போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


குறித்த கடற்பகுதி இன்றைய தினம் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் கடற்பயணங்களை தவிர்க்குமாறு முன்னதாகவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் இந்த படகின் ஊடாக அவர்கள் பயணித்திருந்ததாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.