Header Ads



பாராளுமன்றத்திற்கு சென்ற சின்னஞ்சிறு மலர்கள்


இலங்கையின் நாலாபுறங்களிலிருந்தும்  மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவானோர் தினமும் பாராளுமன்ற வளாகத்தை நேரில் பார்வையிட வருகை தருகின்றனர்.


பாராளுமன்ற சபா மண்டபம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைப் பார்வையிடுவதற்கு அப்பால், ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் அவர்கள் கற்கும் பாடங்களுக்கும் பொருத்தமான வகையில், பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயற்பாடு உள்ளிட்ட பணிகள் தொடர்பில் புரிந்துணர்வை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின்  சேவைகள் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் செயற்படுகின்றனர்.


கிட்டி கோவ் (Kiddie Cove) முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் மற்றும் ஆசிரியர்கள் குழுவினர் நேற்று (10) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம். 

No comments

Powered by Blogger.