அமெரிக்கத் தாக்குதலை அடுத்து, ஜோர்தான் மீது ஈரான் தாக்குதுல்
அமெரிக்கப் படைகள் ஈரானிய நிலப்பரப்பு மீது தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானின் லாரக் தீவில் அமைந்துள்ள 2 ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த அமெரிக்கத் தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தன.
இதனையடுத்து ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எனினும், ஜோர்தானிய ஆயுதப் படைகளின் பேச்சாளரை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், தமது வான்பரப்பிற்குள் நுழைந்த எட்டு ஈரானிய ஏவுகணைகளை ஜோர்தானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment