Header Ads



ஹிஜாப் உடைக்கு எப்படி தடை விதிப்பீர்கள்...?


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் தங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அணிந்து வந்த ஹிஜாப் உடையை அனுமதிக்க முடியாது என கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிகழ்வு  இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை முன்னெடுப்போர் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 


கல்முனை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் இவ்வாறு இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளின் பின்புலத்தை அறிந்து  அடையாளம் கண்டு அரசாங்கமும் சுகாதார அமைச்சும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஐந்து முஸ்லிம் பெண் ஆசிரியைகள் கடமையாற்றி வந்த நிலையில் குறித்த பாடசாலை நிருவாகம் ஹபாயா ஆடையை தவிர்க்குமாறு வலியுறுத்தியது. இந்த உரிமை மீறலுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற மேன்முறையீடு மூலம் வழக்கு தாக்கல் செய்ததன் விளைவாக குறித்த ஆசிரியைகள் தங்களது  கலாசார ஆடையுடன் கடமைக்கு செல்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.

No comments

Powered by Blogger.